ஹாலிவுட்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஹாலிவுட் நடிகர்
பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ். இவர் ஆஸ்கர், கோல்டன் குளோப் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். கோவாவில் நடைபெற்ற 54-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், அவருக்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. இதற்காகத் தனது மனைவி கேத்ரின், மகன் டைலன் ஆகியோருடன் இந்தியா வந்தார்.
விருது விழாவுக்குப் பிறகு அவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்குத் தனது குடும்பத்தினருடன் சென்று பார்த்தார். கோயிலில், கழுத்தில் மாலையணிந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மைக்கேல் டக்ளஸ் பகிர்ந்துள்ளார்.
