“ஆண் நடிகர்களுக்கு பாராட்டு... பெண்ணுக்கு விமர்சனமா?” - எமி ஜாக்சன் ஆதங்கம்

“ஆண் நடிகர்களுக்கு பாராட்டு... பெண்ணுக்கு விமர்சனமா?” - எமி ஜாக்சன் ஆதங்கம்
Updated on
1 min read

தனது புதிய தோற்றம் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நடிகை எமி ஜாக்சன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் ஒரு நடிகை. என்னுடைய பணியை தீவிரமாக செய்கிறேன். கடந்த மாதம் என்னுடைய புதிய படத்துக்கான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. அந்தப் படத்துக்காக என்னுடைய உடல் எடையை குறைத்து முழுவதுமாக அந்தக் கதாபாத்திரத்தில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன். இதில் எழும் ஆன்லைன் கூக்குரல்கள் (குறிப்பாக ஆண்கள்) மிகவும் வருத்தமடையச் செய்கிறது.

என்னுடன் பணியாற்றும் ஆண் நடிகர்கள் படத்துக்காக தங்களது தோற்றங்களை எப்படியெல்லாமோ மாற்றிக்கொள்கிறார்கள், அதற்காக அவர்கள் பாராட்டும் பெறுகிறார்கள். இதுவே ஒரு பெண் அவர்களின் அழகுக்கான வரையைறை மீறி வழக்கத்துக்கு மாறான முடியுடன் கூடிய தோற்றத்தை மாற்றிக்கொண்டால், அவரை விமர்சிப்பதற்கு எல்லா உரிமையும் உண்டு என நினைக்கிறார்கள்” என ஆதங்கம் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனது தோற்றத்தை ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பியுடன் சிலர் ஒப்பீடுவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in