ஹாலிவுட் நடிகர் கிறிஸ் எவன்ஸ் திருமணம்

ஹாலிவுட் நடிகர் கிறிஸ் எவன்ஸ் திருமணம்
Updated on
1 min read

பாஸ்டன்: பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் எவன்ஸ். ‘ஃபென்டாஸ்டிக் 4’ என்ற படத்தில் நெருப்பு மனிதனாகக் குழந்தைகளைக் கவர்ந்தவர் இவர். அடுத்து மார்வெலின் ‘கேப்டன் அமெரிக்கா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார்.

‘தி அவெஞ்சர்ஸ்’, ‘கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ஜர்’, ‘தி அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ உட்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் போர்ச்சுக்கல் நடிகை அல்பா பப்டிஸ்டாவைக் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. அல்பா, நெட்பிளிக்ஸில் வெளியான ‘வாரியர் நன்’என்ற தொடர் மூலம் பிரபலமானவர். இந்நிலையில் இவர்கள் திருமணம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ரகசியமாக நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதில் மார்வெல் நடிகர்களான ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in