

பிரியங்கா சோப்ராவுக்கு யாரும் இ-மெயில் செய்யாதீர்கள் என்று ஹாலிவுட் பாடகர் ஹாலன் போவல் கிண்டல் செய்துள்ளார்.
பாலிவுட் திரைப்பட நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் குவாண்டிகோ டிவி சீரியல் மூலம் ஹாலிவுட்டிலும் தனக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் அளவில் உள்ளனர்.
இதன் காரணமாக பிரியங்காவின் இ மெயில் முகவரிக்கு ரசிகர்கள் பலரும் தினந்தோறும் வாழ்த்துகள் அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து ஹாலிவுட் பாடகரும், இசையமைப்பாளருமான ஹாலன் பால் தனது இன்ஸ்டர்கிராம் பக்கத்தில், “பிரியங்கா சோப்ராவுக்கு யாரும் இ மெயில் செய்யாதீர்கள். அவர் நீங்கள் அனுப்பும் எந்த செய்தியையும் படிப்பதில்லை. இது ஒரு சாதனை” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பிரியங்காவின் போனையும் அவர் புகைப்படமாக பதிவிட்டுள்ளார். அதில் பிரியங்கா தனது போனை கையில் வைத்து கொண்டு இருக்கிறார். அதில் படிக்கப்படாத 2,57, 623 படிக்கப்படாத இ- மெயிகள் உள்ளன.
ஹாலன் போவலின் இப்பதிவுக்கு கீழ் பிரியங்காவின் ரசிகர்கள் பலரும் கிண்டல் அடித்து பதிவிட்டிருந்தனர்.