

ஹாலிவுட் முன்னணி நட்சத்திரமான வில் ஸ்மித், டிசம்பர் மாதம் மும்பை வரவிருக்கிறார். அவர் நடித்துள்ள 'ப்ரைட்' என்ற படத்தின் இந்திய ப்ரீமியர் காட்சியில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இந்தியாவில் பிரபலமான வெகு சில ஹாலிவுட் நட்சத்திரங்களில் வில் ஸ்மித்தும் ஒருவர். வில் ஸ்மித் நடிப்பில் பல படங்கள் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது 'ப்ரைட்' என்ற படத்தில் வில் ஸ்மித் நடித்துள்ளார். 'சூஸைட் ஸ்க்வாட்' படத்தை இயக்கிய டேவிய எயர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 18 அன்று இந்த படத்தின் ப்ரீமியர் காட்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சயின்ஸ் ஃபிக்ஷன், ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டிசம்பர் 22ஆம் தேதி இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.