ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை: மடோனா

ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை: மடோனா
Updated on
1 min read

நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல பாடகி மடோனா. நடிகையுமான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 64 வயதாகும் இவர், சில நாட்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பாக்டீரியா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவர் மேலாளர் தெரிவித்திருந்தார். இதனால் அவர் கலந்துகொள்ள இருந்த இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் தான் குணமடைந்து வருவதாக அவர் இப்போது தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில், “உங்களின் பிரார்த்தனைகள், ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி. குணமடைந்து வருகிறேன். மருத்துவமனையில் காலையில் எழுந்ததும் என் குழந்தைகள்தான் முதலில் ஞாபகத்துக்கு வருகிறார்கள். என் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. கூடிய விரைவில் குணமடைந்து வட அமெரிக்காவில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in