இந்தியாவில் வரும் 6ம் தேதி வெளியாகிறது Insidious: The Red Door

இந்தியாவில் வரும் 6ம் தேதி வெளியாகிறது Insidious: The Red Door
Updated on
1 min read

மும்பை: ‘இன்சிடியஸ்: தி ரெட் டோர்’ திரைப்படத்தை வரும் 6ம் தேதி வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ் நிறுவனம்.

இப்படம் உலகம் முழுவதும் வரும் 7ஆம் தேதி வெளியாகும் நிலையில், இந்தியாவில் ‘இன்சிடியஸ்' படங்களுக்கு இதற்கு முன்பு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு ‘இன்சிடியஸ்: தி ரெட் டோர்’ திரைப்படத்தை ஒருநாள் முன்கூட்டியே வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ் நிறுவனம்.

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திகில் படம் ‘இன்சிடியஸ்’ (Insidious). வழக்கமான பேய்ப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரும் வசூலையும் ஈட்டியது. இதன் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையும் ஜேம்ஸ் வான் இயக்கியிருந்தார்.

முதல் இரண்டு பாகங்களுக்குப் பிறகு ‘இன்சிடியஸ்' படங்களிலிருந்து ஜேம்ஸ் வான் விலகவே, வான்னெல், ஆடம் ராபிட்டல் இருவரது இயக்கத்தில் அடுத்த இரண்டு பாகங்கள் வெளியாகின. இந்த சூழலில் தற்போது நடிகர் பாட்ரிக் வில்சன் இயக்கத்தில் ‘இன்சிடியஸ்' படவரிசையில் ஐந்தாம் பாகமாக ‘இன்சிடியஸ்: தி ரெட் டோர்’ வெளியாகிறது.

இப்படம் உலகம் முழுவதும் வரும் 7ஆம் தேதி வெளியாகும் நிலையில், இந்தியாவில் ‘இன்சிடியஸ்' படங்களுக்கு இதற்கு முன்பு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு ஒருநாள் முன்கூட்டியே வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ் நிறுவனம். மேலும் ஹாரர் பட ரசிகர்களுக்காக இப்படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 12 மணிக்கு திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆங்கிலம் தவிர்த்து, தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in