ஹாலிவுட் நடிகர்: ஆலன் அர்கின் மறைவு

ஹாலிவுட் நடிகர்: ஆலன் அர்கின் மறைவு
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆலன் அர்கின் (89). ‘கேட்ச் - 22’, ‘இண்டியன் சம்மர்’, ‘மதர் நைட்’, ‘ஆர்கோ’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘லிட்டில் மிஸ் சன்ஷைன்’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவர் இவர். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள ஆலன் அர்கின், ‘லிட்டில் மர்டர்ஸ்’, ‘ஃபயர் சேல்’ உட்பட சில படங்களை இயக்கியும் உள்ளார்.

கலிபோர்னியாவில் வசித்து வந்த இவர், இதய நோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்தார்.இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலமானார். இதைஅவர் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in