புதிய சூப்பர்மேனாக நடிக்கும் டேவிட் காரன்ஸ்வெட்: டிசி நிறுவனம் அறிவிப்பு

புதிய சூப்பர்மேனாக நடிக்கும் டேவிட் காரன்ஸ்வெட்: டிசி நிறுவனம் அறிவிப்பு
Updated on
1 min read

வாஷிங்டன்: சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க டேவிட் காரன்ஸ்வெட் என்ற நடிகரை அறிமுகம் செய்துள்ளது டிசி நிறுவனம்.

டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்களில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று சூப்பர்மேன். திரைப்படங்களில் இந்த கதாபாத்திரங்களில் கிர்க் அலைன் (1948-50), கிரிஸ்டோபர் ரீவ்ஸ் (1978-80), பிராண்டன் ரூத் (2006), ஹென்றி கெவில் (2013 -17) உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் 2013 முதல் 2017 வரை சூப்பர்மேனாக நடித்த ஹென்றி கெவிலின் ஆஜானுபாகுவான தோற்றம் அந்த கதாபாத்திரத்துக்கான நம்பகத்தன்மையை அதிகரித்தது.

தற்போது டிசி யுனிவர்ஸை ரீபூட் செய்யும் பணியில் வார்னர் பிரதர்ஸ் மற்றும் டிசி நிறுவனங்கள் திவீரம் காட்டி வருகின்றன. அதன்படி மார்வெல் நிறுவனத்தின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன் தற்போது டிசியின் இணை தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில், அடுத்ததாக ‘சூப்பர்மேன்: லெகசி’ என்ற படத்தை ஜேம்ஸ் கன் இயக்க இருக்கிறார். இப்படத்தில் சூப்பர்மேனாக நடிக்க டேவிட் காரன்ஸ்வெட் என்ற நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது முக அமைப்பு கிட்டத்தட்ட ஹென்றி கெவிலின் முக அமைப்பை போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சூப்பர்மேனின் ஜோடியான லாயிஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ரேச்சல் ப்ராஸ்னன் ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in