Published : 18 Dec 2019 12:52 PM
Last Updated : 18 Dec 2019 12:52 PM

சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம்  | டிசம்.19 | படக்குறிப்புகள்

காலை 9.30 மணி | THE LONGEST NIGHT / LA MALA NOCHE | DIR: GABRIELA CALVACHE | ECUDOR / MEXICO | 2019 | 95'

ஒரு அழகிய பெண் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறாள். அதில் வரும் பணத்தை பெண்களைக் கடத்தும் கூட்டத்தின் தலைவனுக்குத் தர வேண்டும். ஆனால் அவளது பெண்ணின் நோயும், அவளது போதை மருந்து பழக்கமும் அவள் கொடுக்க வேண்டிய பங்கை கொடுக்க விடாமல் தடுக்கிறது. ஒரு எதிர்பாராத நிகழ்வு அவளுக்கு விடுதலை தரும் சந்தர்ப்பத்தைத் தருகிறது. .

3 nominations


பகல் 12.00 மணி | MOSCOW SQUARE / MOSZK - VA TER | DIR: FERENC TOROK | HUNGARY | 2001 | 88'

1989 ஹங்கேரியின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. இருப்பினும், பெட்டியா மற்றும் அவரது நண்பர்களால் அதில் பெரிதாக கவனம் செலுத்த முடியவில்லை. அவர்கள் தங்கள் கல்வியை முடித்து பட்டம் பெற உள்ளனர். அவர்களுக்கு முக்கியமான விஷயங்கள் விருந்து நிகழ்ச்சிகள், பெண்கள், எளிதாக கொஞ்சம் பணத்தை உருவாக்குவது. நிச்சயமாக, கேள்விகள் கசியும் வரவிருக்கும் தேர்வில் தேர்ச்சி கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

3 wins

மாலை 3.00 மணி | STRAY / STRAY | DIR: DUSTIN FENELEY | NEW ZEALAND | 2018 | 104'

பனிபடர்ந்த மலைப்பிரதேசத்தை கடக்கும் அந்நியர்களான ஒரு ஆணும், பெண்ணும் முதன்முதலாக சந்திக்க நேரிடுகிறது. இருவரும் தங்களின் கடந்த காலத்தை பற்றி பகிர்கிறார்கள். அந்த ஆண் தனது காதலியை கொலை செய்தவனை, கொலை செய்யும் முயற்சியில் தோல்வி அடைந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர். அந்த பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டு உளவியல் சிகிச்சை பெற்று திரும்பியவர். அந்த குளிர்ந்த மற்றும் தொலைதூர நிலப்பரப்பு, அறிமுகமில்லாத அந்த இரண்டுபேரின் வாழ்க்கையை மாற்ற என்ன செய்தது?

5 wins & 15 nominations.

மாலை 6.00 மணி NO SCREENING

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x