Published : 17 Dec 2019 02:24 PM
Last Updated : 17 Dec 2019 02:24 PM

சென்னை பட விழா | கேஸினோ  | டிசம்.18 | படக்குறிப்புகள்

காலை 9.45 மணி | ORGAN | ANO HI NO ORUGAN | DIR: EMIKO HIRAMATSU | JAPAN | 2019 | 120'

ஆர்கான், 2-ம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. டோக்கியோ நகரத்தின் மீது அமெரிக்க ராணுவம் குண்டுமழை பொழிகிறது. ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள். டோக்கியோ நகருக்கு வெகு தொலைவில் காடி இட்டாகுரா, மிட்சு நோமியா இரு பெண்களும் சேர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி நடத்தி வருகின்றனர். அமெரி்க்காவின் தாக்குதல் தங்கள் கிராமத்தை நெருங்குவதை அறிந்து தங்களின் பாதுகாப்பில் இருக்கும் குழந்தைகளை எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. ஜப்பானின் இயற்கை அழகு, கிராமத்தின் பழக்கங்கள், குறும்பு ஆகியவற்றை அழகாக படமாக்கப்பட்டுள்ளது. இரு பெண்களும் சேர்ந்து அந்தக் குழந்தைகளை எவ்வாறு பாதுகாத்தனர்?

பகல் 12.15 மணி | AREN'T YOU HAPPY | DAS MELANCHOLISCHE MADCHEN | DIR: SUSANNE HEINRICH | GERMANY | 2019 | 80'

இயக்குநர் சூசேன் ஹெயின்ரிச்சின் முதல் திரைப்படமான 'ஆர் நாட் யூ ஹாப்பி', உறங்குவதற்கு இடம் தேடி நகரம் முழுதும் சுற்றித் திரியும் தனித்த பெண்ணின் கதை. நகரில் சுற்றித் திரியும் போது, காமத்தைத் தூண்டுவது அல்லது வேறு விதங்களில், புதிய மனிதர்களுடன் அப்பெண் உரையாடுகிறாள். இந்த சந்திப்புகளில், மாறும் இவ்வுலகில் தன்னையே புரிந்துகொள்ள முற்படுகிறாள். குழந்தைப் பேறு, காமம், பாலியல், சமூக உரையாடல்கள் ஆகியவற்றை இந்தப் படம் வேறு கோணங்களில் உணர்த்துகிறது. இருத்தலியல் நகைச்சுவையைகக் கையாண்டிருக்கும் இந்த திரைப்படம், பின்நவீனத்துவம், பெண்ணியம் உள்ளிட்டவற்றை பேசுகிறது. இத்திரைப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது.

3 wins & 1 nomination.

பகல் 2.45 | SIBYL / SIBYL | DIR: JUSTINE TRIET | FRANCE | 2019 | 100'

உழைத்துக் களைத்த உளவியல் நிபுணர் சிபில். ஆரம்ப காலத்தில் தனக்குப் பிடித்திருந்த எழுத்து வேலைக்குத் திரும்புகிறார். ஆனால், அவரின் பேஷண்டும் நடிகையுமான மார்காட், சிபிலைச் சந்திக்கிறாள். மீண்டும் தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறாள். உளவியல் பணியை விட்டுவிட்டதாகக் கூறும் சிபில் அதை மறுக்கிறார். ஆனாலும் மார்காட்டின் சூழல், சிபிலை உதவச் செய்கிறது. மார்காட்டின் நிலைதடுமாறும் வாழ்க்கை குறித்துத் தெரிந்துகொள்ளும் சிபில், அவளுக்கு உதவ முடிவெடுக்கிறார். அது சில பிரச்சினைகளை நோக்கி சிபிலை உந்தித் தள்ளுகிறது.

2 wins & 5 nominations.

மாலை 4.45 மணி | DESPITE THE FOG | NONOS-TANTE LA NEBBIA | DIR: GORAN PASKALJEVIC | SERBIA | 2019 | 120'

இன்டர்போலின் கூற்றுப்படி, பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் மேற்பட்ட சிறார் அகதிகள் இன்று ஐரோப்பாவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களில் பாதி பேர் இத்தாலிய சாலைகளில் உள்ளனர். அவர்களின் ஒருவரைப் பற்றியக் கதைதான் டிஸ்பைட் இந்த ஃபாக். ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடி இத்தாலிய கடற்கரையில் ரப்பர் படகில் பயணம் செய்யும் போது முகம்மதுவின் பெற்றோர்கள் நீரில் மூழ்குகின்றனர். அப்பா அம்மாவை இழந்துவாடும் சர்ஹானை வேறொரு குடும்பத்தினர் எடுத்து வளர்க்கின்றனர். அவர்கள் ஏற்கெனவே தனது மகன் மார்க்கை இதேபோன்ற ஒரு விபத்தில் பறிகொடுத்தவர்கள். வலேரியா (டொனடெல்லா ஃபினோக்ஜாரோ) மற்றும் பாவ்லோ (ஜியோர்ஜியோ டிராபாசி) ஆகியோர் சுற்றுப்புறத்திலும் சொந்த குடும்பத்தினரிடமிருந்தும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர், அவர்கள் முகம்மதுவை வைத்திருப்பதற்கான முடிவை ஏற்கவில்லை - இது இனவெறி பெருகிய மூடுபனிக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு உலகின் கதையாகும்.

மாலை 7.00 மணி | THE BRA / THE BRA | DIR: VEIT HELMER | AZERBAIJAN | 2019 | 90'

ரயில் ஓட்டுநர் நுர்லான் ஓய்வு பெறுவதற்கு முன் கடைசி ஒரு முறை பாகுவுக்கு ரயில் ஓட்டிச் செல்கிறார். மக்கள் வசிக்கும் பகுதியை ஊடுருவிச் செல்லும் ரயில் பாதையில், ஒரு பெண்ணின் உள்ளாடை அவரது ரயில் கண்ணாடியில் சிக்குகிறது. தனது தனிமைக்கு வடிகாலாக, பாகு பகுதியில் ஒரு அறை எடுத்துத் தங்கி, அந்த உள்ளாடையின் உரிமையாளர் யார் என்று தேடிப் போகிறார் நுர்லான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x