Published : 19 Dec 2018 03:35 PM
Last Updated : 19 Dec 2018 03:35 PM

மரணம் ஒரு அசாதாரண அனுபவம் - போதையேத்தும் க்ளைமாக்ஸ்

 சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டிசம்பர் 18-ம் தேதி தேவி திரையரங்கில் இரவு 7 மணிக்கு திரையிடப்பட்ட படத்தின் விமர்சனம் |

பிரான்ஸ் நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் திறமையான நடனக் கலைஞர்கள் குழுவாக செயல்படுகின்றனர். போதையின் உச்சக்கட்டத்தில் ஒருவர்மீது ஒருவர் இருக்கும் உள்ளுணர்வுகள் வெளிப்பட தொடங்குகின்றன. அளவுகடந்த போதை மயக்கத்தில் அந்த மனிதர்களின் விபரீத செயல்களால் என்ன நடக்கிறது என்பதை மிகவும் அற்புதமான கண்ணோட்டத்தில் திரைப்படமாக்கியிருக்கிறார் கேஸ்பர் நுயி.

உள்ளுணர்ச்சிகளை தூண்டும் விதமான பின்னணி இசையுடன், திரையை ஒரு குழப்பமான கண்ணோட்டத்துடன் பார்க்கவைக்கும் கேமரா ஆங்கில்களும், மயக்கத்திற்கு இதமான இருட்டும், நடிகர்களின் அசாதாரண நடிப்பும் பார்வையாளர்களுக்கு போதையை ஏற்படுத்துகிறது. படத்தின் தொடக்கத்திலேயே 5 நிமித்திற்குமேலான நடன ஒத்திகையை ஒரே ஷாட்டில் காட்சிப்படுத்தியது படத்தின் பிரம்மாண்டத்தை காட்டுகிறது. இனம், மதம், காதல், காமம், உள்ளுணர்வு, அரசியல் போன்ற அனைத்தையும் படத்தில் பேசியிருக்கிறார். ஹீரோ, வில்லன் என்று தனிப்பட்ட கதாபத்திரமின்றி, அனைவரது உள்ளுணர்வுகளை எவ்வுளவு அபாயகரமானது என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைப்படமாக்கியிருக்கிறார்.

உலகம் முழுக்க விமர்சகர்களால் பாராட்டு பெற்ற இப்படம்,  2018 கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் சிறந்த கலைநய படத்திற்க்கான விருதினை வென்றது. கேஸ்பர் நுயிக்கு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கவே, தேவி திரையரங்கு சில நிமிடத்திலேயே ஹவுஸ்புல் ஆனது. நேற்று தவறவிட்டோர், மீண்டும் இப்படத்தினை இன்று அண்ணா திரையரங்கில் மதியம் 2.30 மணி காட்சியில் காணலாம்.

சுப்ரமணி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x