“நீட் தேர்வர்களின் தற்கொலையை இயல்பாக்கி விட்டோம்; இது வருத்தத்துக்குரியது” - நடிகை டாப்ஸி வேதனை

“நீட் தேர்வர்களின் தற்கொலையை இயல்பாக்கி விட்டோம்; இது வருத்தத்துக்குரியது” - நடிகை டாப்ஸி வேதனை
Updated on
1 min read

பாட்னா: பாட்னாவில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வர்களின் தற்கொலை மரணத்தை நாம் இயல்பாக்கி விட்டோம்; பாட்னா சம்பவம் மிகவும் வருத்தத்துக்குரியது என்று நடிகை டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் நடிப்பில் உருவாகி உள்ள ‘அஸ்ஸி’ திரைப்படம் வரும் 20-ம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது. அனுபவ் சின்ஹா இயக்​கி​ உள்ளார். இதில், கனி ஸ்குரு​தி, ரேவ​தி, மனோஜ் பஹ்​வா, குமுத் மிஸ்ரா ஆகியோர் நடித்​துள்​ளனர். இதில் ஊழல் நிறைந்த அமைப்பு மற்​றும் ஆணா​திக்​கத்​துக்கு எதி​ராகப் போராடும் வழக்​கறிஞ​ராக டாப்ஸி நடித்​துள்​ளார். பாலியல் வன்​கொடுமை வழக்கை விசாரிக்​கும் நீதி​மன்ற விவ​காரத்​தை மையக்கருவாக கொண்ட படம் இது என தகவல்.

இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்னாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டாப்ஸி பேட்டி அளித்தார். அப்போது நீட் தேர்வுக்கு தயாரான மாணவி ஒருவரின் மரணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. “இங்கு மட்டுமல்ல இது மாதிரியான சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. இது எனக்கு மிகுந்த வருத்தம் தருகிறது. இந்த மரணங்களின் எண்ணிக்கை கூடுதலாக கூட இருக்கலாம்.

இப்போது நாம் இதுபோன்ற தற்கொலை மரணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்திவிட்டோம். அதை நாம் இயல்பாக்கி விட்டோம்; இது மிகவும் வருத்தத்துக்குரியது. ” என்று அவர் தெரிவித்தார். பாட்னாவில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவி ஒருவரின் மரணம் சர்ச்சையாகி உள்ள நிலையில் டாப்ஸி இதை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்தும் அவர் இதில் பேசி இருந்தார்.

“நீட் தேர்வர்களின் தற்கொலையை இயல்பாக்கி விட்டோம்; இது வருத்தத்துக்குரியது” - நடிகை டாப்ஸி வேதனை
‘அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்பதில்லையே…’ - காங். எம்.பி மாணிக்கம் தாகூரின் சூசக பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in