ஏஐ மூலம் டீப்ஃபேக் வீடியோ: மிருணாள் எச்சரிக்கை; ஸ்ருதி ஹாசன் வழக்கு

ஏஐ மூலம் டீப்ஃபேக் வீடியோ: மிருணாள் எச்சரிக்கை; ஸ்ருதி ஹாசன் வழக்கு
Updated on
1 min read

செயற்கை நுண்​ணறிவு (ஏ.ஐ) தொழில்​நுட்​பத்​தின் மூலம் பிரபலங்​களின் உரு​வத்தை அனு​ம​தி​யின்​றிப் பயன்​படுத்​திப் போலி வீடியோக்​கள் உரு​வாக்​கப்​படு​வது அதி​கரித்து வரு​கிறது. இதற்கு எதி​ராக ஆளுமை உரிமை​களைப் பாது​காக்​கக் கோரி திரை பிரபலங்​கள் வழக்​குத் தொடுத்​துத் தடை உத்​தர​வைப் பெற்​றுள்​ளனர்.

இந்​நிலை​யில், போலி வீடியோக்​களை உரு​வாக்​குபவர்​களுக்கு எதி​ராகக் கடும் கண்​டனத்​தைத் தெரி​வித்​துள்ள மிருணாள் தாக்​குர் அவர்​களுக்கு எச்​சரிக்​கை​யை​யும் விடுத்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “எனது உரு​வம் அல்​லது அடை​யாளத்​தைப் பயன்​படுத்தி டீப்ஃபேக் மற்​றும் போலி வீடியோ உரு​வாக்​கு​வதோ, பகிர்​வதோ சட்​ட​விரோத​மானதும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாததும் ஆகும். இது​போன்ற செயல்​களை உடனடி​யாக நிறுத்த வேண்​டும். இது அதி​காரப்​பூர்வ எச்​சரிக்​கை. இனி எனது அடை​யாளத்​தைத் தவறாகப் பயன்​படுத்​தும் எந்​தச் செயலுக்​கும் எதி​ராகச் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

இதற்​கிடையே, தனது பெயர், படம், உரு​வம், குரல் மற்​றும் ஆளுமை உரிமை​களைப் பாது​காக்​கக் கோரி ஸ்ருதி ஹாசன் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​துள்​ளார்.

ஏ.ஐ மற்​றும் டீப்ஃபேக் தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​தித் தனது முகத்தை மார்ப்​பிங் செய்து ஆபாச​மான, விரும்​பத்​த​காத படங்​கள் மற்​றும் வீடியோக்​களை உரு​வாக்​கு​வ​தாக அவர் மனு​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

அனு​ம​தி​யின்றி தனது பெயரை​யும் படத்​தை​யும் பயன்​படுத்தி ஆன்​லைனில் பொருட்​கள் விற்​கப்​படு​வது, போலி விளம்​பரங்​கள் செய்​யப்​படு​வதை​யும் தனது மனு​வில் குறிப்​பிட்​டுள்ள ஸ்ரு​திஹாசன், அனு​ம​தி​யின்றி தனது அடை​யாளத்​தைப் பயன்​படுத்​தி​ய​வர்​களிடம் இருந்து ரூ.15 கோடி நஷ்டஈடும்​ கேட்​டுள்​ளார்​.

ஏஐ மூலம் டீப்ஃபேக் வீடியோ: மிருணாள் எச்சரிக்கை; ஸ்ருதி ஹாசன் வழக்கு
பிரபல வில்லன் நடிகர் பிரதீப் ராவத் புற்றுநோயால் காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in