விவ​சா​யத்​தில் பூச்​சிக்​கொல்லிகளின் அபா​யம் சொல்​லும் ‘தி இந்​தியா ஸ்டோரி’

விவ​சா​யத்​தில் பூச்​சிக்​கொல்லிகளின் அபா​யம் சொல்​லும் ‘தி இந்​தியா ஸ்டோரி’
Updated on
1 min read

காஜல் அகர்​வால், ஷ்ரே​யாஸ் தல்​படே இணைந்து நடித்​துள்ள திரைப்​படம், ‘தி இந்​தியா ஸ்டோரி’. விவ​சா​யத்​தில் பூச்​சிக்​கொல்லி மருந்​துகள் மற்​றும் ரசாயனங்​கள் தவறாகப் பயன்படுத்தப்​படு​வ​தால் ஏற்​படும் விளைவு​களை மைய​மாக வைத்து இப்படம் எடுக்​கப்​பட்​டுள்​ளது. சேட்​டன் டிகே இயக்கியுள்ள இதை சாகர் பி ஷிண்டே எழு​தித் தயாரித்​துள்​ளார். ஜீ ஸ்டூடியோஸ் வழங்க, எம்​ஐஜி புரொடக் ஷன் இணைந்து தயாரித்​துள்​ளது.

உண்​மைச் சம்​பவங்​களை அடிப்​படை​யாகக் கொண்ட இந்​தப் படம் பற்றி இயக்​குநர் சேட்​டன் டிகே கூறும்​போது, “சமூக பொறுப்​புணர்​வைத் தூண்​டும் இந்​தப் படம், சினி​மா​வைத் தாண்டி விவாதங்​களை உரு​வாக்​கும் என்று நம்​பு​கிறேன். ஒரு குடும்பத்தின் கதை​யாக மட்​டுமே சொல்​லாமல், பொது​ மக்​களின் உடல் ​நலம் மற்​றும் பாது​காப்​பைப் பாதிக்​கும் பிரச்​சினை​களை இக்​கதை விரி​வாக எடுத்​துரைக்​கிறது. இந்​தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஜூலை 24ம் தேதி வெளி​யாகிறது” என்​றார்.

விவ​சா​யத்​தில் பூச்​சிக்​கொல்லிகளின் அபா​யம் சொல்​லும் ‘தி இந்​தியா ஸ்டோரி’
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in