

‘தகாஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி, இயக்கிய படம், ‘த பெங்கால் ஃபைல்ஸ்'. இதில் தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சிம்ரத் கவுர், மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், சாஸ்வதா சாட்டர்ஜி என பலர் நடித்துள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்த மறுநாள், கொல்கத்தாவில் மதக் கலவரம் மூண்டது. அதில் இந்துக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது.
கடந்த ஆண்டு செப்.5-ல் வெளியான இப்படம் மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டது. கொல்கத்தாவில் நடந்த இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கு விவேக் அக்னிகோத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அங்கு பாஜக ஆட்சி அமைய இருப்பதால், இப்படம் வரும் 15-ம் தேதி அங்கு வெளியாக இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஏராளமான திரையரங்குகளில் இப்படத்தை திரையிட உள்ளனர்.