

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா, ‘புஷ்பா 2’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் பாடல் மூலம் அவருக்கு இந்தி வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
பாலிவுட்டின் இளம் ஹீரோ கார்த்திக் ஆர்யனுடன் அவர் நடித்துள்ள ‘து மேரி ஜிந்தகி ஹே’ இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
அடுத்து இப்ராஹிம் அலிகான் ஜோடியாக, அவர் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ‘டிலர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே ‘சூமந்தர்’ என்ற பாலிவுட் படத்திலும் அவர் ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியில் நடித்துள்ள முதல் படம் வெளிவரும் முன்பே அவர் மேலும் 2 படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இதற்கிடையே மலேசியா சென்றுள்ள ஸ்ரீலீலா, அங்கு நடிகர் அஜித்குமாரை சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.