திரை​யுல​கில் பாலியல் சுரண்டல்: பாடகி ஸ்ரேயா கோஷல் ஒப்புதல்

பாடகி ஸ்ரேயா கோஷல்

பாடகி ஸ்ரேயா கோஷல்

Updated on
1 min read

பிரபல பின்​னணி பாடகி​யான ஸ்ரேயா கோஷல், இந்​தி, தமிழ், தெலுங்கு உள்பட பல்​வேறு மொழிகளில் பாடி வரு​கிறார். அவர் சமீபத்​தில் அளித்​துள்ள பேட்​டி​யில், திரை​யுல​கில் வாய்ப்புகளுக்காக பாலியல் சுரண்​டல் இருப்​பது உண்​மை​தான் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்​போது, “இப்​போது நிலைமை கொஞ்சம் மேம்​பட்​டிருக்​கிறது. சமூக ஊடகங்​களின் பரவலுக்கு முன்​பு, திரை​யுல​கில் உள்ள பெண்​கள் மிக​வும் சிரமப்​பட்​டனர். நான் இளம் வயதிலேயே திரை​யுல​குக்கு வந்​து​விட்​ட​தால் நான் செல்​லும் இடங்​களுக்​கும் என் பெற்​றோரும் எப்​போதும் வருவார்கள். அதனால், எனக்கு ஏதும் இது​போன்ற பிரச்​சினை வந்த​தில்​லை.

திரை​யுல​கில் ஊதிய சமத்​து​வம் குறித்த தவறான புரிதல்​கள் இருக்​கின்​றன. இது பாலினம் சார்ந்த விஷ​யம் அல்ல. ஆண்​களும் இதை எதிர்​கொள்​கிறார்​கள். நான் ஆரம்​ப​காலத்​தில் பல பாடல்களைப் பணமில்​லாமல் பாடி இருக்​கிறேன். தற்​போது திரையுல​கில் உள்ள அனைத்து நல்ல பாடகர்​களும் பல பாடல்களை இலவச​மாகவே பாடு​கிறார்​கள். சிறந்த வாய்ப்​பு​கள் வரும்​போது, அவர்​கள் பெரிய தொகை​யை​யும் வசூலிக்​கிறார்​கள்” என்​றார்.

<div class="paragraphs"><p>பாடகி ஸ்ரேயா கோஷல்</p></div>
Chandlo - கதவற்ற கூண்டுகளும், சிறகை விரிக்காத மீராக்களும் | திரை தேவதைகள் 34

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in