

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் கரீனா கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ‘கிங்’. இதில் ஷாருக்குடன் தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன், அபய் வர்மா, ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெரும் ‘டாடி கூல்’ என்ற பாடலில் ஷாருக்கானுடன் கரீனா கபூர் இணைய இருக்கிறார். இந்தப் பாடல் இம்மாத இறுதியில் தென் அமெரிக்காவில் படமாக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி இணைய இருக்கிறது.
ஷாருக்கான், கரீனா கபூர் இருவரும் இதற்கு ‘கபி குஷி கபி கம்’, ‘டான்’ படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
ரெட் சில்லீஸ் நிறுவனம் மற்றும் மர்பிலிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது.