

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த 2020-ம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சுஷாந்த் சிங்கின் உடல் மீட்கப்பட்டது. இவர், தோனியின் பயோபிக்கான ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’, ‘கேதார்நாத்’, ‘சிச்சோரே’ என சில படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து, அவருடைய காதலி ரியா சக்கரவர்த்தி மீது, சுஷாந்தை தற்கொலைக்குத் தூண்டினார் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பின்னர் போதைப் பொருள் வழக்கிலும் ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.
சுஷாந்த் சிங் மரண வழக்கை விசாரித்த சிபிஐ, ரியா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தது. சுஷாந்த் வழக்கில் ரியாவின் பெயர் தேவையின்றி இழுக்கப்பட்டதால் அவர் மன உளைச்சலில் இருந்தார்.
இந்நிலையில் நடிப்பிலிருந்து விலகிய அவர், தற்போது புதிய ஆடை பிராண்ட்-டை தொடங்கியுள்ளார். ரூ.1 கோடி முதலீட்டில் தொடங்கிய அத்தொழிலின் மதிப்பீடு இப்போது ரூ.40 கோடியைத் தாண்டியுள்ளது என்று சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
முதலில் ஆன்லைனில் தொழிலைத் தொடங்கிய அவர், கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்த்ராவில் ஷோ ரூம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தியுடன் இணைந்து ரியா இதைச் செய்து வருகிறார்.