

ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடித்துள்ள ‘ராமாயணம்’ படத்தை நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படம் 2 பாகமாக உருவாகிறது. இதன் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் 2-வது பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தில் இருந்து ராவணனாக நடிக்கும் யாஷ், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே ஆகியோரின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. வலிமை, அறிவு, அதிகாரம் மற்றும் கம்பீரம் என ராவணனின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் யாஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.