

நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் ‘ஸ்கேரி பிக்சர்’ என்ற திகில் திரைப்படத்தை நடிகர் ராணா டகுபதி தயாரிக்கிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் ரவி பாபு இயக்குகிறார். டெல்லியில் நடந்த ‘ஹாரர்கான் 26’ விழாவில் கலந்துகொண்ட நடிகர் ராணா, இப்படம் பற்றி மேடையில் அறிவித்தார்.
அவர் கூறும்போது, “இது திகில் படம். என் நண்பரும் இயக்குநருமான ரவி பாபு இயக்குகிறார். அவர் தெலுங்கில் பல திகில் படங்களை இயக்கியுள்ளார். இது அவருடைய முதல் இந்தி திரைப்படம். படத்தின் தலைப்பு முதன்முறையாக இங்கே அறிவிக்கப்படுகிறது” என்றார். இந்தியில் உருவாகும் இப்படம் பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது, நடிகை கங்கனா ஹாலிவுட்டில் உருவாகும் ‘பிளெஸ்டு பி தி ஈவில்’ என்ற திகில் படத்திலும் நடிக்கிறார்.