படப்பிடிப்பில் விபத்து: நடிகை நுஷ்ரத் பருச்சாவுக்கு முதுகுத் தண்டில் எலும்பு முறிவு

படப்பிடிப்பில் விபத்து: நடிகை நுஷ்ரத் பருச்சாவுக்கு முதுகுத் தண்டில் எலும்பு முறிவு
Updated on: 
1 min read

பிரபல இந்தி நடிகை​யான நுஷ்ரத் பருச்​சா, தமிழில் சேது, சந்​தானம் நடித்த ‘வாலிப ராஜா’ படத்​தில் நடித்​துள்​ளார். இவர் புதிய படம் ஒன்​றின் படப்​பிடிப்​புக்​காக​வும் விடு​முறைக்கா​கவும் இந்​தோ​னேசி​யா​வின் பாலி தீவுக்கு சில நாட்​களுக்கு முன் சென்​றார். அங்கு நடந்த படப்​பிடிப்​பில் கலந்​து​கொண்​ட​போது எதிர்​பா​ராத வித​மாக விபத்​தில் சிக்​கி​னார்.

இதில் அவர் முதுகு தண்​டு​வடத்​தில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. இதையடுத்து அங்​குள்ள மருத்​து​வ​மனை ஒன்​றில் உடனடி​யாக அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

நுஷ்ரத் தரப்​பிலிருந்து வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை​யில், “அவர் தொடர்ந்து மருத்​து​வக் கண்​காணிப்​பில் உள்​ளார்; அவருக்கு முதுகுத் தண்​டு​வடத்​தில் அறுவை சிகிச்சை செய்​யப்பட இருக்​கிறது. அவரை ஏர் ஆம்​புலன்ஸ் மூலம் மும்​பைக்கு அழைத்து வரு​வதற்​கான ஏற்​பாடுகள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. குணமடைய அவகாசம் தேவைப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.

படப்பிடிப்பில் விபத்து: நடிகை நுஷ்ரத் பருச்சாவுக்கு முதுகுத் தண்டில் எலும்பு முறிவு
Belonging: நான் ‘நான்’ ஆக இருக்க இடம் இருக்கிறதா? | டீனதிகாரம் 4
படப்பிடிப்பில் விபத்து: நடிகை நுஷ்ரத் பருச்சாவுக்கு முதுகுத் தண்டில் எலும்பு முறிவு
துருவ் விக்ரமுக்கு மூன்றாவது படத்தில் விருது!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in