நஸ்ருதீன் ஷா Vs கங்கனா ரனாவத் - வார்த்தைப் போரும் பின்னணியும்

நஸ்ருதீன் ஷா Vs கங்கனா ரனாவத் - வார்த்தைப் போரும் பின்னணியும்
Updated on
1 min read

ஜார்க்கண்ட் அரசுத் தேர்வு முறைகேடு தொடர்பான மாணவர் போராட்டத்துக்கு ஆதரவளிக்காத திரையுலகினரை ‘நாய்கள்’ என மூத்த நடிகர் நஸ்ருதீன் ஷா விமர்சித்துள்ளார். அவருக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், அவரை ‘நரி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் போராட்டம் குறித்து திரையுலகப் பிரபலங்கள் மவுனமாக இருப்பதாக விமர்சித்த மூத்த நடிகர் நஸ்ருதீன் ஷா, “வாயில் எலும்புத் துண்டு இருக்கும் வரை நாய் குரைக்காது, அது கீழே விழும்போதுதான் குரைக்கத் தொடங்கும்” என்று கடுமையாகச் சாடினார்.

ஜார்க்கண்ட்டில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் பியூஷ் மிஷ்ரா, “இப்போது எந்த ‘நாய்கள்’ வாயில் எலும்புத் துண்டை கவ்விக் கொண்டு அமைதியாக இருக்கின்றன?” என்று நஸ்ருதீனுக்கு கேள்வி எழுப்பினார்.

நடிகர் பியூஷ் மிஷ்ராவின் இந்தக் கருத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கங்கனா ரனாவத், “எல்லோரும் யாரோ ஒருவருக்கு நாயாகவே இருக்கிறார்கள். ஆனால், எனக்கு உணவளிக்கும் தாய்நாட்டுக்கு உண்மையுள்ள நாயாக இருப்பதில் பெருமையடைகிறேன். நஸ்ருதீன் இந்த நாட்டின் உணவைச் சாப்பிட்டுவிட்டு, பக்கத்து நாட்டுக்காகப் போராடுகிறார்” என்று, அவரை ‘நரி’ என்று கடுமையாகச் சாடினார்.

ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி அம்மாநில மாணவர்கள் 3 வாரங்களுக்கும் மேலாக தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நஸ்ருதீன் ஷா Vs கங்கனா ரனாவத் - வார்த்தைப் போரும் பின்னணியும்
டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் ராஜினாமா - பின்னணி என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in