இளை​ய​ராஜா இசையமைத்த ‘கோந்தல்’ மராத்தி படம் ஆஸ்கருக்கு தேர்வு

இளை​ய​ராஜா இசையமைத்த ‘கோந்தல்’ மராத்தி படம் ஆஸ்கருக்கு தேர்வு
Updated on
1 min read

இளை​ய​ராஜா இசையமைத்த ‘கோந்​தல்’ என்ற மராத்தி திரைப்​படம் இந்​தியா சார்​பில் ஆஸ்​கர் விருதுக்​குத் தேர்வு செய்​யப்​பட்​டு உள்​ளது.

சந்​தோஷ் தவக்​கர் இயக்​கத்​தில் உரு​வான இப்படத்தில் இஷிதாதேஷ்​முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி, நிஷாத் போயிர் மற்​றும் அனுஜ் பிரபு உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர். இளைய​ராஜா இசையமைத்த இப்​படம் மகா​ராஷ்டி​ரா​வின் பாரம்பரிய​மான ‘கோந்​தல்’ என்ற நாட்​டுப்​புறச் சடங்​கு​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகி​யுள்​ளது. திரு​மணக் கொண்டாட்ட​மாகத் தொடங்​கும் கதை, பின்​னர் ஆசை, பொறாமை, துரோகம் மற்​றும் மறைக்​கப்​பட்ட குடும்​பப் பிரச்சினை​கள் நிறைந்த கதை​யாக மாறுகிறது.

திருமண வாழ்க்​கை​யில் சிக்​கித் தவிக்​கும் இளம் பெண் ஒருவரைச் சுற்றி நகரும் இப்​படம், கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்​கு​களில் வெளி​யானது. 56-வது இந்​தி​ய சர்​வ​தேச திரைப்பட விழா​வில் சிறந்த இயக்​குநருக்​கான சில்​வர் பீக்​காக் விருதை இப்​படம் பெற்​றது. இந்நிலை​யில், 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99 -வது ஆஸ்​கர் விருதுகளுக்​கான போட்​டி​யில், சிறந்த வெளி​நாட்​டுப் பட பிரி​வில் பங்​கேற்க இந்​தியா சார்​பில் ‘கோந்​தல்’ தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

இளை​ய​ராஜா இசையமைத்த ‘கோந்தல்’ மராத்தி படம் ஆஸ்கருக்கு தேர்வு
‘பத்​தா’ பட நிகழ்வில் முதல்வர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in