

கிருஷ்ணரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம், ‘கிருஷ்ணாவதாரம்’. 3 பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தை ஹர்திக் கஜ்ஜார் இயக்கியுள்ளார்.
கிருஷ்ணராக சித்தார்த் குப்தா, சத்ய பாமாவாக சம்ஸ்கிருதி ஜெயனா, ராதையாக சுஷ்மிதா பட், ருக்மிணியாக நிவாஷினி கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இதை கிரியேட்டிவ்லேண்ட் ஸ்டூடியோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சஜன் ராஜ் குரூப், ஷோபா சாந்த் தயாரித்துள்ளனர். பிரசாத் சாஷ்டே இசையமைத்துள்ளார்.
அவர் இசையில் உருவாகியுள்ள ‘பிரேம் கி லீலா’ என்ற பாடல் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் மே 7-ல் வெளியாகும் இப்படத்தின் ஆங்கிலப் பதிப்பு 2 வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் வெளியாகும்.