கமால் ஆர் கானின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய முடிவு

கமால் ஆர் கானின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய முடிவு
Updated on
1 min read

துப்பாக்கியைத் தவ றாகப் பயன்​படுத்​தி​ய தால் கைது செய்​யப்​பட்​டுள்ள இந்தி நடிகர் கமால் ஆர்கானின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய போலீ​ஸார் முடிவு செய்​துள்​ளனர்.மும்பை அந்​தேரி​யில் உள்ள ஒஷிவ​ரா​வில் நாளந்தா சொசைட்டி என்ற அடுக்​கு​மாடிக் குடி​யிருப்பு உள்​ளது.

இந்த வளாகத்​தில் கடந்த 18-ம் தேதி துப்​பாக்​கிச் சூடு நடை​பெற்​றது. இதில் 2வது மாடி​யில் உள்ள எழுத்​தாளர் நீரஜ் குமார் மிஸ்ரா என்​பவரது வீட்​டிலும் 4-வது மாடி​யில் இருந்த மாடல் பிரதீக் பெய்ட் வீட்​டிலும் துப்​பாக்​கிக் குண்டு பாய்ந்தது. குடி​யிருப்பு வாசிகள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​திய இச்சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸார் விசாரணை நடத்​தினர். அதில் நடிகர் கமால் ஆர் கான் தான் தனது துப்​பாக்​கி​யால் சுட்​டது தெரிய​வந்​தது.

துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​யதை அவர் ஒப்​புக் கொண்​டார். பின்​னர் அவரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரிடம் இருந்த துப்​பாக்​கியை பறி​முதல் செய்​தனர். உரிமம் பெற்ற துப்​பாக்​கியைப் பயன்​படுத்​தி​ய​தாக​வும், யாருக்​கும் தீங்கு விளைவிக்​கும் நோக்​கம் தனக்கு இல்லை என்றும் கமால் ஆர் கான் கூறிய​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

உரிமம் பெற்ற துப்​பாக்​கியைத் தவறாகப் பயன் படுத்​தி​ய​தால் அந்​தேரி பெருநகர மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றம் அவரை 14 நாட்​கள் நீதி​மன்​றக் காவலில் வைத்​துள்​ளது. இதையடுத்து அவருடைய துப்​பாக்கி உரிமத்தை ரத்து செய்ய போலீ​ஸார் முடிவு செய்​துள்​ளனர். கமால் ஆர்​ கானிடம் உள்ள 7.76 மி.மீ ஜெர்​மன் தயாரிப்பு மவுசர் கைத்​துப்​பாக்​கிக்கான உரிமத்தை ரத்து செய்​வதற்​கான நடவடிக்கைகளைத் தொடங்​கு​வதற்​கான ஆவணங்​களை வெர்​சோவா போலீ​ஸார், மும்பை போலீஸ் கமிஷனர் அலு​வல​கத்​துக்கு அனுப்​பி​யுள்​ளது.

கமால் ஆர் கானின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய முடிவு
சென்னையில் சாக்கு மூட்டையில் பிஹார் இளைஞர் சடலம் - மனைவி, குழந்தையையும் கொன்று வீசிய கொடூரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in