

ரன்வீர் சிங் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’துரந்தர்’. இப்படம் 1000 கோடி வசூலைத் தாண்டி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘டான் 3’ படத்திலிருந்து விலகிவிட்டார். அதற்குப் பதிலாக ஜெய் மேத்தா இயக்கவுள்ள ‘ப்ரளய்’ படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம் ஜோம்பி கதைக்களத்தை பின்னணியாக கொண்ட படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆக்ஷன் கதையாகும். இப்படத்தின் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘லோகா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு இந்த இந்திப் படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இப்படத்தில் அவருக்கும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது என்கிறது படக்குழு.
ஏப்ரல் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. அதற்கு முன்னதாக நாயகன் – நாயகி இருவருக்குமே சண்டைக் காட்சிகளுக்கான ஆயத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள். இப்படம் 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என தெரிகிறது. ரன்வீர் சிங் – கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோருடன் நடிக்கும் இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.