ரீமிக்ஸ் பாடலில் ஆட தமன்னா மறுத்தாரா?

நடிகை தமன்​னா

நடிகை தமன்​னா

Updated on
1 min read

‘ஜெ​யிலர்’ படத்​தில் இடம்​பெற்ற ‘கா​வாலா’, ‘ஸ்​த்ரீ 2’ படத்​தின் ‘ஆஜ் கி ராத்’ மற்​றும் தெலுங்​கில் சில சூப்​பர் ஹிட் பாடல்​களுக்கு நடனமாடி இருக்​கிறார் தமன்​னா.

குறிப்​பாக ‘ஆஜ் கி ராத்’ பாடல் சமூக வலை​தளங்​களில் பெரும் சாதனை படைத்​து, சிறப்​புப் பாடல்​களுக்கு தமன்​னா​தான் சரியான தேர்வு என்​பதை மீண்​டும் நிரூபித்​தது.

அதனால் பாலிவுட்​டின் புகழ்​பெற்ற பாடலான ‘சோலி கே பீச்​சே’ பாடலின் மறு உரு​வாக்​கத்​தில் தமன்​னாவை நடிக்க வைக்​கப் பரிசீலனை செய்​யப்​படு​வ​தாக சமீபத்​தில் செய்​தி​கள் வெளியாயின. சஞ்​சய் தத் நடித்து 1993ம் ஆண்​டில் வெளி​யான ‘கல்​நாயக்’ படத்​தில் இடம்​பெற்ற இப்​பாடலில் மாதுரி தீக் ஷித் நடன​மாடி இருந்​தார்.

பாலிவுட்​டின் மிகச் ​சிறந்த நடனப் பாடல்​களில் ஒன்​றாக இன்றளவும் இப்​பாடல் கருதப்​படுகிறது. ‘கல்​நாயக்’ படத்​தின் தொடர்ச்​சி​யாக ‘கல்​நாயக் ரிட்​டர்ன்​ஸ்’ உரு​வாவ​தாகச் சமீபத்​தில் அறி​வித்​தார் சஞ்​சய் தத்.

இதில் ‘சோலி கே பீச்​சே’ பாடலை ரீமிக்ஸ் செய்ய முடிவு செய்​துள்​ளனர். இதில் ஆடு​வதற்​காக தமன்​னாவை அணுகிய​தாகக் கூறப்​படு​கிறது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் நிராகரித்​து​விட்​ட​தாகத் தகவல்​கள் வெளி​யாகி உள்ளன.

<div class="paragraphs"><p><em>நடிகை தமன்​னா</em></p></div>
Maa Behen: சமூகம் உருவாக்கிய ‘சூனியக்காரிகள்’ ரேகா, ஜெயா, சுஷ்மா | திரை தேவதைகள் 21

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in