துளசிதாசரின் வாழ்வை படமாக்கும் ‘ஹனுமன் அன்ஸ்’ இயக்குநர்

இயக்குநர் விஷால் சதுர்வேதி

இயக்குநர் விஷால் சதுர்வேதி

Updated on
1 min read

நீம் கரோலி பாபாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு உருவான இந்தித் திரைப்படம் ‘ஹனுமன் அன்ஸ்’. ஷோபினாவ் சத்யா, சந்தன் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை விஷால் சதுர்வேதி இயக்கினார்.

ஆக.7-ல் வெளியாகி 2 வாரங்கள் சுமாரான வசூலைப் பெற்ற இப்படம் பின்னர் வாய் மொழியாக வரவேற்பை பெற்றது. ரூ.320 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அடிப் படையாகக் கொண்டது.

பக்தி, அற்புதங்கள் மற்றும் ஆன்மிகத்தின் மூலம் நம்பிக்கையைப் பெறுவது போன்ற உணர்வுகளை இத்திரைப்படம் முன் வைக்கிறது.

இந்நிலையில் இதன் இயக்குநர் விஷால் சதுர்வேதி, தனது அடுத்த ஆன்மிகப் படத்தை அறிவித்துள்ளார். இப்படத்துக்கு ‘ராம்போலா – தி இம்மார்ட்டல் ஸ்டோரி ஆஃப் கோஸ்வாமி துளசிதாஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது துளசிதாசரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிறது.

இப்படம் அவருடைய வாழ்க்கைப் பயணம், ஆன்மிகத் தேடல், இறை பக்தி ஆகியவற்றைத் திரையில் கொண்டு வர உள்ளது. மகாவீர் ஜெயின், அமித் உபத்யாய் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, ஏழை, எளிய மக்களின் நலனுக்காகச் செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>இயக்குநர் விஷால் சதுர்வேதி</p></div>
‘மீசைய முறுக்கு 2’ படத்தில் கானா கலைஞர்களின் உலகம்: ஹிப் ஹாப் ஆதி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in