‘காந்தி டாக்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? - மவுனமும் காதலும்!

‘காந்தி டாக்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? - மவுனமும் காதலும்!
Updated on
1 min read

இந்தியத் திரையுலகில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு மவுனத் திரைப்படமாக வெளியாகியுள்ளது ‘காந்தி டாக்ஸ்’. விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இப்படம் வரும் ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஒரு சாமானிய மனிதனின் போராட்டங்களை வசனங்கள் இன்றி, காட்சிகளின் வாயிலாகவே விவரிக்கிறது ட்ரெய்லர். வசனங்கள் இல்லா இடத்தில் மாயாஜாலம் நிகழ்த்துக்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை.

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் என தமிழ் ஆடியன்ஸுக்கு பரிச்சயமான முகங்கள் ஒரு இந்திப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தென்படுவது புதிய மாற்றம். ட்ரெய்லரில் வரும் விஜய் சேதுபதி, அதிதி ராவ் இடையிலான காதல் காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் புல்லாங்குழல் இசையும் அழகு. கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இந்தப் படம் ப்ளாக் காமெடி பாணியில் உருவாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் 1987-ல் வெளிவந்த 'பேசும் பட’த்துக்குப் பிறகு, ஒரு மவுனப் படம் வெளியாவது சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘காந்தி டாக்ஸ்’ ட்ரெய்லர்: 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in