துரந்​தர் 2 பாடல் சர்ச்சை: மத்தியஸ்தரை நியமித்​தது நீதிமன்றம்

துரந்​தர் 2 பாடல் சர்ச்சை: மத்தியஸ்தரை நியமித்​தது நீதிமன்றம்
Updated on
1 min read

ரன்​வீர் ​சிங், சாரா அர்​ஜுன், மாதவன், சஞ்​சய் தத், அக்‌ஷய் கன்னா நடிப்​பில் வெளி​யாகி வெற்றி பெற்ற ‘துரந்​தர்’ படத்​தின் 2ம் பாகம் மார்ச் 19-ல் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்று வரு​கிறது. இது​வரை ரூ.1700 கோடிக்​கும் அதி​க​மாக வசூலித்​துள்ள இப்​படம், இந்​தி​யா​வில் மட்​டும் ரூ.1,000 கோடிக்​கும் அதி​க​மாக வசூலித்த முதல் இந்​திப் படம் என்ற பெரு​மையை பெற்​றுள்​ளது.

இதில் 1989-ம் ஆண்டு சன்னி தியோல் நடிப்​பில் வெளி​யான ‘திரிதேவ்​’ படத்​தில் இடம்​பெற்ற ‘ஒயே ஓயே திர்ச்சி டோபி​வாலே’ என்ற பாடலை அனு​ம​தி​யின்றி பயன்​படுத்​தி​யுள்​ள​தாகத் திரிமூர்த்தி ஃபிலிம்ஸ் என்ற நிறு​வனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்​குத் தொடர்ந்​தது.

முறை​யான உரிமம் பெறாமல் இந்​தப் பாடல் திரையரங்​கு​கள், டிஜிட்​டல் தளங்​கள் மற்​றும் விளம்​பரங்​களுக்​குப் பயன்படுத்தப்பட்​டுள்​ளது என்​றும் அந்த ஒரிஜினல் பாடலின் இசை உரிமம் தங்களிடமே இருக்​கிறது என்​றும் அந்​நிறு​வனம் அதில் கூறியுள்ளது.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி துஷார் ராவ் கெடேலா, ராயல்டி மற்​றும் இழப்​பீடு தொடர்​பான விவ​காரங்​களை இரு தரப்​பினரும் மத்​தி​யஸ்​தம் மூலம் சுமுக​மாகத் தீர்த்​துக்​கொள்​ளலாம் என்று யோசனை தெரி​வித்​தார். இந்த நடை​முறையை மேற்​பார்​வை​யிட மூத்த மத்​தி​யஸ்​தரை நியமிக்​க​வும் நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.

துரந்​தர் 2 பாடல் சர்ச்சை: மத்தியஸ்தரை நியமித்​தது நீதிமன்றம்
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in