

நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா
சென்னையைச் சேர்ந்த கணேஷ் ஆச்சார்யா, பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குநராகவும் நடிகராகவும் இருக்கிறார். தமிழில், என் சகியே, வயசு பசங்க, ரவுத்திரம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருடைய பயோபிக், ‘கணேஷ்: டஸ்ட்டு ஸ்டார்டஸ்ட்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதை அவரே இயக்கியுள்ளார்.
தனது திரைப் பயணத்தில் சந்தித்த சிரமங்கள், தியாகங்கள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்துக்குத் தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. டிச.11-ல் வெளியாகும் இப்படம் பற்றி கணேஷ் ஆச்சார்யா கூறும்போது, ‘நான் எப்படி என் பாதையை அமைத்துக் கொண்டேன் என்பதைக் காட்டும் ஊக்கமளிக்கும் கதைதான் இந்தப் படம். கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறும் சாதாரண மக்களுக்கு இப்படம் உத்வேகமாக அமையும். இதில் என் வாழ்க்கை பயணத்தின் பல சிறந்த தருணங்கள் இடம்பெற்றுள்ளன” என்றார்.