நயன்​தா​ரா​வின் இந்​திப் படத்தில் அரவிந்த் சாமி, ஃபஹத் ஃபாசில்!

நயன்​தா​ரா​வின் இந்​திப் படத்தில் அரவிந்த் சாமி, ஃபஹத் ஃபாசில்!
Updated on
1 min read

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை இயக்​கிய வம்சி பைடிபள்ளி அடுத்து இயக்​கும் படத்​தில் சல்​மான் கான் ஹீரோ​வாக நடிக்கிறார். இதில் நயன்​தாரா நாயகி​யாக நடிக்​கிறார்​. ‘ஜ​வான்’ படத்துக்​குப் பிறகு அவர் நடிக்​கும் 2-வது இந்தி படம் இது.

இப்​படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரிக்​கிறார். இப்​படத்​தின் படப்​பிடிப்பு மும்​பை​யில் நடந்து வருகிறது. சல்​மான் கான், நயன்​தாரா தொடர்​பான காட்​சிகள் படமாகி வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் இப்​படத்​தில் வில்​ல​னாக நடிக்க, ‘துரந்​தர்’ மூலம் கவனிக்​கப்​பட்ட பாலிவுட் நடிகர் அக் ஷய் கன்​னா, மலை​யாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ஆகியோரிடம் பேசி வரு​கின்​றனர். இதில் ஒரு​வர் வில்​ல​னாக நடிக்க இருப்​ப​தாகத் தெரி​கிறது. நடிகர் அரவிந்த் ​சாமி முக்​கிய வேடத்​தில் நடிக்க இருக்​கிறார்.

நயன்​தா​ரா​வின் இந்​திப் படத்தில் அரவிந்த் சாமி, ஃபஹத் ஃபாசில்!
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? - கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in