

தமிழில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர், அடா சர்மா. தொடர்ந்து, ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்திருந்தார். ‘தி கேரளா ஸ்டோரி’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இவர், இப்போது சூப்பர் ஹீரோ படத்தில் நடித்துள்ளார்.
மற்ற சூப்பர் ஹீரோக்களைப் போல் இல்லாமல், அவரது கதாபாத்திரம் கொஞ்சம் சோம்பேறித்தனமான சூப்பர் ஹீரோவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘அக்ரோமாடோப்சியா’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த நிறக் குருடு கதாபாத்திரத்துக்கு உலகம் கருப்பு, வெள்ளையாக மட்டுமே தெரியும். பொறுப்புகளை விட ஓய்வெடுக்கவும், தூங்கவும் விரும்பும் இந்த சூப்பர் ஹீரோ கதையை ராஜேஷ் பச்சானி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டைட்டில் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. படத்துக்கு ‘சூப்பர் வெள்ளி’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் அடா சர்மா, வெள்ளி விஜிலட்சுமி கிருஷ்ணமூர்த்தி சந்திரசேகரன் சுவாமி ஐயர் என்ற கதாபாத்திரத்தில் தென்னிந்திய பெண்ணாக நடிக்கிறார்.