

அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடித்து இந்தியில் வெற்றிபெற்ற த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 படங்களுக்குப் பிறகு அதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் அக்ஷய் கன்னா ஒப்பந்தமாகி இருந்தார்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் திடீரென விலகினார். இதையடுத்து ‘த பேமிலிமேன் 3’ வெப்தொடர் மற்றும் பல இந்திப் படங்களில் நடித்துள்ள ஜெய்தீப் அலாவத், அவருக்கு பதில் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் கூறும்போது, “படம் பற்றி விரிவான பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் அக்ஷய் கன்னா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு திடீரென விலகிக்கொண்டார். அவர் தொழில்முறை நடிகராக நடந்துகொள்ளவில்லை. அவரது நடத்தை முறையற்றது. இதனால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” என்றார்.
ரன்பீர் கபூர் நடித்து வெற்றிபெற்றுள்ள ‘துரந்தர்’ படத்தில் அக்ஷய் கன்னாவின் நடிப்பு பேசப்பட்டுள்ளது. அந்த வெற்றி காரணமாக இப்படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாகக் கூறி வருகின்றனர்.