“பொறுத்துக் கொள்ள முடியாது” - அபிஷேக் பச்சன் எச்சரிக்கை

“பொறுத்துக் கொள்ள முடியாது” - அபிஷேக் பச்சன் எச்சரிக்கை
Updated on
1 min read

நடிகர் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கடந்த சில ஆண்டுகளாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு ஐஸ்வர்யா ராயோ, அபிஷேக் பச்சனோ கருத்துச் சொன்னதில்லை.

இந்நிலையில் அபிஷேக் பச்சன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள். இது முட்டாள்தனமானது.

எங்கள் இருவருக்​கும் உண்மை நிலை தெரி​யும். நாங்​கள் மகிழ்ச்​சி​யாக, ஆரோக்​கிய மாக இருக்​கிறோம். அதில் உண்மை இல்லை என்​ப​தால் இது​போன்ற வதந்​தி​கள் எங்களைப் பாதிப்​ப​தில்​லை.

அதே நேரம் என்​னை​யும் என் குடும்​பம் பற்​றி​யும் பொய்​யான, முட்​டாள்​தன​மான விஷ​யங்​களைப் பேசுவதைப் பொறுத்​துக்​கொள்ள முடி​யாது” என்று எச்​சரித்​துள்​ளார்​.

“பொறுத்துக் கொள்ள முடியாது” - அபிஷேக் பச்சன் எச்சரிக்கை
நடிப்புக்கு குட்பை சொல்கிறார் ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in