“வலி இல்லாமல் நிகழ்ந்துவிடவில்லை” - முதல் மனைவி உடனான பிரிவு குறித்து ஆசிஷ் வித்யார்த்தி

“வலி இல்லாமல் நிகழ்ந்துவிடவில்லை” - முதல் மனைவி உடனான பிரிவு குறித்து ஆசிஷ் வித்யார்த்தி
Updated on
1 min read

“இந்தப் பிரிவு வலியில்லாமல் நிகழ்ந்துவிடவில்லை” என முதல் மனைவி பில்லு உடனான பிரிவு குறித்து நடிகர் ஆசிஷ் வித்யர்த்தி உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள ஆஷிஷ் வித்யார்த்தி (60), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா (50) என்ற ஆடை வடிவமைப்பாளரை கடந்த மே 25 அன்று திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், தன்னுடைய முதல் மனைவி பில்லுவுடனான பிரிவு குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஆசிஷ் வித்யார்த்தி, “இது ஒரே இரவில் எடுத்த முடிவல்ல. பல மாதங்களாக நாங்கள் ஒருவரையொருவர் பேசி விவாதித்து, இறுதியில் இந்த முடிவை எடுத்தோம். நான் பில்லுவை வெறுக்க வாய்ப்பேயில்லை. எங்களுக்கு நடந்த அழகான திருமணத்தில் பில்லுவுக்கும் எனக்கும் நிறைய அற்புதமான மெமரீஸ் உண்டு.

நான் வெறும் பில்லுவை என்னுடைய மகனின் அம்மாவாக மட்டும் பார்க்கவில்லை. அவர் எனக்கு ஒரு நல்ல தோழி. இந்தப் பிரிவு வலியில்லாமல் நிகழ்ந்துவிட்டது என தயவு செய்து நினைத்துவிட வேண்டாம். வலியுடன் கூடிய பிரிவு இது. அவ்வளவு எளிதாக இதனை கடந்துவிட முடியாது” என்றார்.

ரூபாலி பருவாவை சந்தித்தது குறித்து பேசிய அவர், “கடந்த ஆண்டு என்னுடைய விலாக்கிங் வீடியோவின்போது நான் ரூபாலியை சந்தித்தேன். நாங்கள் நிறைய பேசினோம். அவரும் வலியை கடந்து வந்திருக்கிறார் என்பதை உணரந்தேன். 5 ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை இழந்த ரூபாலி மீண்டும் திருமணம் செய்வது குறித்து நினைத்து பார்க்கவில்லை. அவரிடம் உரையாடியபோது, அவர் மீண்டுமொரு திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை புதுப்பிக்க நினைப்பதை உணர முடிந்தது. வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும், சுயமாக முன்னேற துடிக்கும் ஒருவரோடு வாழ்வின் இந்தத் தருணத்தில் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in