

அமிதாப் பச்சனுடன் நடிப்புக்கான இடத்தைப் பகிர்ந்துகொள்வதில் அடிமையாகி விட்டேன் என்று டாப்ஸி கூறியுள்ளார்.
2016-ல் வெளியான 'பிங்க்' படத்துக்குப் பிறகு, தற்போது 'கோன் பனேகா குரோர்பதி' விளையாட்டில் அமிதாப்புடன் இணைகிறார் நடிகை டாப்ஸி பன்னு.
இதுகுறித்து வியாழக்கிழமை தன் ட்விட்டர் பக்கத்தில் டாப்ஸி பதிவிட்டுள்ளார். அதில் 'கோன் பனேகா குரோர்பதி' தளத்தில் அமிதாப்புடன் டாப்ஸி உள்ள படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ''இந்த மனிதரின் நடிப்பு ஆகப் பெரும் போதை. அவருடன் நடிப்புக்கான இடத்தைப் பகிர்ந்து கொள்வது போதவில்லை. அவருடன் மீண்டும் இணைந்துள்ள 'கோன் பனேகா குரோர்பதி'யில் என்னுடைய மூளை பயிற்சி பெறுவதைப் பாருங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இரவில் வீட்டுக்கு வரும் நேரம், அணியும் ஆடை, சிரிப்பு, மது அருந்தும் பழக்கம், தனிப்பட்ட பாலியல் வாழ்க்கை போன்ற அம்சங்கள் இந்தச் சமகால சமூகத்தில் ஒரு பெண்ணை நடத்தை கெட்டவளாக எப்படி வரையறுக்கின்றன என்பதை வலியுடன் விளக்கிய திரைப்படம் 'பிங்க்'.
ஷூஜித் சர்க்கார் தயாரித்த இப்படத்தை அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கியிருந்தார்.