நடிகை பரினீதி சோப்ரா திருமண நிச்சயதார்த்தம்

நடிகை பரினீதி சோப்ரா திருமண நிச்சயதார்த்தம்
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகை பரினீதி சோப்ரா. பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தாவைக் காதலித்து வருவதாகக் கூறப்பட்டு வந்தது.

விழாக்களுக்கு இருவரும் ஒன்றாக வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால், காதலை இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம், டெல்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in