ஒரு நல்ல ஆன்மாவை எந்த குற்றாச்சாட்டும் வெல்ல முடியாது: ஹ்ரித்திக் மனைவி சூசன் கான் ஆதரவுக் குரல்

ஒரு நல்ல ஆன்மாவை எந்த குற்றாச்சாட்டும் வெல்ல முடியாது: ஹ்ரித்திக் மனைவி சூசன் கான் ஆதரவுக் குரல்
Updated on
1 min read

கங்கணா ரணவத் சர்ச்சையில், நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் கான், ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கணா ரணவத்துக்கும், ஹ்ரித்திக் ரோஷனுக்கும் இடையே கடந்த வருடம் முதலே பிரச்சினை நிலவி வருகிறது. அப்போது கங்கணா அளித்த பேட்டி ஒன்றில், ஹ்ரித்திக்கை அற்பத்தனமான முன்னாள் காதலர் என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து இருவர் தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கணா, தங்களுக்குள் இருந்த உறவு முடிந்ததால் ஹ்ரித்திக் தனக்கு தந்த மன உளைச்சலுக்கு, பொதுவில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், தனக்கு இதன் மூலம் எந்த விளம்பரமும் வேண்டாம் என்றும், ஹ்ரித்திக் பற்றி யார் எப்போது என்ன கேட்டாலும் பதில் சொல்வேன் என்றும் கூறினார்.

இந்நிலையில், ஹ்ரித்திக்கின் முன்னாள் மனைவி சூசன், ஹ்ரித்திக்குடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி, "எந்த குற்றச்சாட்டும், தீய சதியும் நல்ல ஆன்மாவை வெல்ல முடியாது" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in