நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது ‘கட்டல்’ திரைப்படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது ‘கட்டல்’ திரைப்படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

சான்யா மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கட்டல்’ திரைப்படம் நெஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தியாவில் தனது சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் தனது கட்டணங்களை 20% முதல் 60% வரை குறைத்ததன் மூலம் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 30% அதிகரித்ததாக அந்நிறுவனம் கூறியிருந்தது. அத்துடன் இந்திய உள்ளடக்கங்களிலும் அதிக கவனத்தை நெட்ஃப்ளிக்ஸ் செலுத்தி வந்தது.

அந்த வரிசையில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் ‘கட்டல்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. காமெடி டிராமா வகை திரைப்படமான இதில் சான்யா மல்ஹோத்ரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஆனந்த் ஜோஷி, விஜய் ராஸ் ஆகியோர் மூக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் யஷோவர்தன் மிஷ்ரா இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இப்படம் வரும் மே 19ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘காதல்’ படத்தின் ட்ரெய்லர்:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in