கேன்ஸ் 2023-ல் திரையிட அனுராக் காஷ்யபின் ‘கென்னடி’ படம் தேர்வு

கேன்ஸ் 2023-ல் திரையிட அனுராக் காஷ்யபின் ‘கென்னடி’ படம் தேர்வு
Updated on
1 min read

கேன்ஸ் 2023-ம் ஆண்டு திரைப்பட விழாவில் இயக்குநர் அனுராக் காஷ்யபின் ‘கென்னடி’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

76-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா இந்த ஆண்டு மே 16-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுவது வழக்கம். புகழ்பெற்ற இந்தத் திரைப்பட விழாவில் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவில் இயக்குநர் அனுராக் காஷ்யபின் ‘கென்னடி’ திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. ‘கென்னடி’ திரைப்படம் தேர்வாகியிருப்பதை கேன்ஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தொடர்ச்சியாக சென்று வருபவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் உருவான ‘கேங்ஸ் ஆஃப் வாசப்பூர்’ படம் 2012 கேன்ஸ் திரைப்பட விழாவிலும், ‘பாம்பே டாக்கீஸ்’ 2013 கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2016-ல் நவாசுதீன் சித்திக் நடிப்பில் வெளியான ‘ராமன் ராகவ் 2.0’ படம் 2016-இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in