கலைப்படைப்பை திருடுவதா? மற்றொரு சர்ச்சையில் ஆதிபுருஷ்

ஆதிபுருஷ் பட போஸ்டர்
ஆதிபுருஷ் பட போஸ்டர்
Updated on
1 min read

ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தில் பிரபாஸின் தோற்றம் வெளியானபோது, வானரசேனா என்னும் அனிமேஷன் நிறுவனம், தங்களின் வடிவமைப்பை அப்படியே காப்பியடித்து இந்த போஸ்டரை உருவாக்கி இருப்பதாக புகார் கூறியிருந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் போஸ்டரும் சர்ச்சைக்குள்ளானது.

இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் இந்தப் படம் சிக்கியுள்ளது. ஓவிய கலைஞர் பிரதிக் சங்கார் என்பவர், தனது கலைப்படைப்பைத் திருடி இந்தப் படத்தின் போஸ்டரை வடிவமைத்திருப்பதாகவும் இதற்கு எந்த அனுமதியும் பெறவில்லை என்றும் சமூக வலைதளப் பக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in