பாலிவுட்
ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கையை படமாக்க இது சரியான தருணம் அல்ல: இம்தியாஸ் அலி
ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை படமாக்க உகந்தது என்றும், ஆனால் அதற்கு இன்னும் நேரமுள்ளது என்றும் இயக்குநர் இமிதியாஸ் அலி கூறியுள்ளார்.
'ராக்ஸ்டார்', 'ஹைவே', 'தமாஷா' உள்ளிட்ட படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியவர் இயக்குநர் இம்தியாஸ் அலி.
ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்' படத்தின் பிரத்யேக காட்சிக்கு வந்த இம்தியாஸ் அலியிடம், ரஹ்மானின் வாழ்க்கையை படமாக எடுக்கலாமா என்று கேட்டபோது, "கண்டிப்பாக. ஆனால் இது அதற்கான சரியான நேரம் அல்ல. இப்போது வேண்டுமானால் அதற்கான ஆய்வை ஆரம்பிக்கலாம். பிறகு எடுக்கலாம்.
அவர் மிகவும் இளையவர். இன்னும் அவரது தொழிலில் மத்தியப் புள்ளி என்று சொல்லப்படும் கட்டத்தைக் கூட அவர் எட்டவில்லை" என்று பதிலளித்தார்.
