'மன்னித்து, கடந்து சென்றுவிட்டேன்' - பாலிவுட்டில் ஓரங்கட்டப்பட்டது குறித்து பிரியங்கா சோப்ரா

'மன்னித்து, கடந்து சென்றுவிட்டேன்' - பாலிவுட்டில் ஓரங்கட்டப்பட்டது குறித்து பிரியங்கா சோப்ரா
Updated on
1 min read

சமீபத்தில், நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தி சினிமாவில் இருந்து தான் ஓரங்கப்பட்டதாக சமீபத்தில் அளித்திருந்த பேட்டி பரபரப்பானது.

அதில், “யாரும் வாய்ப்புக் கொடுக்க முன் வராததால் இந்தி சினிமாவில் இருந்து விலகிவிட்டேன். அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டுப் பிடிக்கவில்லை, அந்த நேரத்தில் தான் ஹாலிவுட் வாய்ப்பு வந்தது” எனத் தெரிவித்திருந்தார். பிரியங்காவுக்கு ஆதரவாக கங்கனா ரனாவத், விவேக் அக்னிஹோத்ரி, சேகர் சுமன், மீரா சோப்ரா உட்பட பல திரைத்துறையினர் கருத்துத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் பேசியுள்ள பிரியங்கா சோப்ரா, "என் வாழ்க்கை பயணத்தைப் பற்றி, நான் இளமையாக இருந்தபோதும் சரி, இப்போதும் சரி பேசியுள்ளேன். நான் என் பயணத்தின் உண்மையைப் பற்றி பேசி இருக்கிறேன்.

இப்போதும், என் வாழ்க்கையின் அந்தக் காலகட்டத்தைப் பற்றி பேசும் அளவுக்கு நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதுமட்டுமல்ல, என் உணர்வுகளை வெளிப்படுத்தும் அளவுக்கு ஓர் இடத்தில் இப்போது இருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனக்கு நடந்தவற்றை நினைக்கும்போது கொந்தளிப்பாக இருக்கும். ஆனால் நான் அவற்றை மன்னித்துவிட்டேன். நீண்ட காலத்திற்கு முன்பே அதை கடந்து நகர்ந்துவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in