மன்னிப்புக் கேட்டார் உர்பி ஜாவேத்

உர்பி ஜாவேத்
உர்பி ஜாவேத்
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகை உர்பி ஜாவேத். வித்தியாசமான கவர்ச்சி ஆடைகளுக்காக பிரபலமானவர். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆடை அணிந்து புகைப்படங்களாக வெளியிடுவார். இவர், கவர்ச்சி உடைகளை அணிவதால் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். இவ்வாறு உடை அணிவதற்காக அவர் மீது போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார். “நான் அணிந்த ஆடைகளின் மூலம் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி நீங்கள் வேறு உர்பியை பார்ப்பீர்கள்” என ட்வீட் மூலம் தெரிவித்திருந்தார். அதற்கு மறுநாளே முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு இந்த பதிவை அவர் பதிவு செய்ததாக தெரிகிறது. அது குறித்து அவரே ட்வீட் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in