பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் ‘கேடி தி டெவில்’

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் ‘கேடி தி டெவில்’
Updated on
1 min read

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ‘கே தி டெவில்’ என்ற பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாக உள்ளது.

1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகும் படம் ‘கேடி தி டெவில்’. துருவா சர்ஜா, ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி உள்ளிட்டப் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தை ப்ரேம் இயக்குகிறார். படத்தில் சத்யவதி கதாபாத்திரத்தில் ஷில்பா ஷெட்டி நடிக்கிறார்.

இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி கூறுகையில், “ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் கேடி தி டெவில், ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு ‘சத்யவதி’ தேவை. இந்த 'கேடி' போர்க்களத்தில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாப்பாத்திரத்தில் சத்தியவதியாக நடிப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in