தேனீக்கள் கொட்டி ஷாயாஜி ஷிண்டே காயம்

தேனீக்கள் கொட்டி ஷாயாஜி ஷிண்டே காயம்
Updated on
1 min read

பிரபல மராத்தி நடிகர் ஷாயாஜி ஷிண்டே. தமிழில், ‘பாரதி’ படத்தில் பாரதியாராக நடித்து புகழ்பெற்றவர். தொடர்ந்து ‘அழகி’, ‘பாபா’, ‘தூள்’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உட்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ஷாயாஜி ஷிண்டே, மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பசுமை ஆர்வலராகவும் இருக்கிறார்.

அங்கு புனே- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையில் உள்ள மரங்கள் வேரோடு பிடுங்கப்படுகின்றன. ஷாயாஜி ஷிண்டே மற்றும் அவர் நண்பர்கள் இணைந்து அந்த மரங்களை மற்ற இடங்களில் நடும் பணிகளைச் செய்து வருகின்றனர். தாஸ்வாடே பகுதியில் நேற்று முன் தினம் அவர் அந்தப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு மரத்தில் இருந்த தேனீக்கள், விரட்டி விரட்டிக் கொட்டின. இதில் ஷாயாஜி ஷிண்டேவும் அவர் நண்பர்களும் காயமடைந்தனர். இப்போது, தான் நலமாக இருப்பதாக ஷாயாஜி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in