சன்னி லியோனை துன்புறுத்துவதா? - வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் விருப்பம்

சன்னி லியோனை துன்புறுத்துவதா? - வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் விருப்பம்
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகை சன்னி லியோன். இவர் தமிழில் ‘வடகறி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ‘ஓ மை கோஸ்ட்’ படத்திலும் நடித்துள்ளார்.

இவர், கடந்த 2019ம் ஆண்டு, கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, ரூ.20 லட்சம் பணம் வாங்கினாராம். ஆனால், ஒப்புக்கொண்டப்படி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் கேரள உயர்நீதிமன்றத்தில், சன்னி லியோன், அவர் கணவர் டேனியல் வெபர் மற்றும் அவர் ஊழியர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் தாங்கள் அப்பாவிகள் எனக் கூறி, சன்னி லியோன் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கிடையே இவர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை நீதிமன்றம், கடந்த வருடம் நவம்பர் மாதம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில், கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்ய விரும்புவதாக கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் என்ன கிரிமினல் குற்றம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் தேவையில்லாமல் அவர் (சன்னி லியோன்) துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. பின்னர் இவ்வழக்கு வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in